"உங்கள் காவல் துறையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்"- குழந்தைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி


காவல்துறையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநகர காவல் நிலையங்களில் வாரந்தோறும் 'நோ  யுவர் போலீஸ்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு  காவல் துறை குறித்து தெரிந்துகொள்வர்.

அதன்படி, கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர். அங்கு இருக்கும் அனைத்து துறைகளுக்கும் சென்று போலீசாரின் அன்றாட பணிகளை தெரிந்து கொண்டனர்.  இதையடுத்து, துணை கமிஷனர் (போக்குவரத்து) சரவணன் மாணவர்களுடன் உரையாடினார்.  



அப்போது அவர், சமூகத்தில் உயர்ந்த பொறுப்புக்கு வரும் மனிதர்கள் அனைவரும் பள்ளி அளவில் தேசிய மாணவர்படை, சாரணர் படை ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்றார். மேலும், மாணவர்கள் அந்த இயக்கங்களில் சேர்ந்து சமூக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர், காவல் துறையில் பணியாற்ற மாணவர்கள் துணை கமிஷனரிடம் ஆர்வம் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...